Advertisment

என். ஐ.ஏ அதிரடி சோதனை; பென்டிரைவ், செல்போன்கள் பறிமுதல்

 N. AI Action Test; Confiscation of pen drives, cell phones

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உட்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

சென்னை, கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 'ஹிஜ்புத் தகர்' என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கோட்டையில் மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள்சேர்ப்பு மற்றும் உதவி புரிதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு வெளிவரும் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் பகுதியில் உள்ள ஹமீத் அக்பர் அகமது என்பவர் வீட்டில் சோதனையில் நடைபெற்ற வருகிறது. அதேபோல ஈரோட்டில் நடைபெற்ற சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்த என்.ஐ.ஏ அதிகாரிகள் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்துவிட்டு கொளத்தூர் பகுதிக்கு விசாரணைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த சோதனைகளில் பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் பலரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

NIA Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe