மேலப்பாளையத்தில் நடந்த முஸ்லிம்அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இலக்கியச் பேச்சாளர்நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, அமித்ஷா இருவரையும் விமர்சித்த அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டார் நேற்று மதியம் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தக் கொண்டு வரப்பட்டபோது அதனைக் கண்டித்து பலமான ஆர்ப்பாட்டங்கள் கிளம்பின.

Advertisment

 The mystery of  nellai Kannan being transferred to Salem Jail

இதனால் பரபரப்பானது கோர்ட் பகுதி. ஜன 13 வரை ரிமாண்ட் செய்யப்பட்ட நெல்லை கண்ணனை பாளை மத்திய சிறையில்டைப்பதற்குக் கொண்டு சென்றனர். அவரது கைதைக் கண்டித்து கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் கடுமையான கோஷங்கள் எழுப்பினர். மற்றொரு பக்கம் பொதுநல அமைப்புகள், நலம் விரும்பிகளின் திரளான எதிர்ப்பு குரல்கள். ஏரியாவே அமளி துமளியானது.

Advertisment

 The mystery of  nellai Kannan being transferred to Salem Jail

அதே சமயம் மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் கோட்டூர் மஸ்தான் தலைமையில் திரளானோரின் கண்டன ஆர்ப்பாட்டம் என நகரம் சூடானது. இந்நிலையில் நெல்லை கண்ணனை பாளை ஜெயிலில் வைத்தால் அமைப்புகளின் போராட்டங்கள் தீவிரமடையலாம் என தகவல் மேலேபோக, அங்கிருந்து வந்த உத்தரவின் பேரில் நெல்லை கண்ணன் சேலம் ஜெயிலுக்குமாற்றப்பட்டு மதுரை சென்றபோது அங்கு நிறுத்த உத்தரவு வர, இரவு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்பு அதிகாலை மேலே இருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்து காலையில் சேலம் கொண்டு செல்லப்படுகிறார்.