Advertisment

கண்ணைத் தோண்டி மர்ம உறுப்பை நசுக்கி சமூகசேவகர் கொலை..? பின்னணியில் மணல் திருடர்களா.!?

காலையில் ஆடுமேய்க்க சென்ற சமூக சேவகர் இரவு வேளையில், கண்ணைத் தோண்டி, மர்ம உறுப்பை நசுக்கிய நிலையில் காயத்துடன் பிணமாக மீட்கப்பட்டுள்ளது சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Advertisment

 mystery incident to the the social worker ..? Sand thieves in the background.!?

சிவகங்கை மாவட்டம் கல்லல் தமிழர் தெருவினை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருடைய மனைவியின் பெயர் வசந்தா. தமிழ்நாடு அரசுப் பேருந்தின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவருக்கும், நிர்வாகத்திற்கும் இடையே நடந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இரு தரப்பிற்குமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்திருக்கின்றது. இதே வேளையில், சமூக அவலங்களுக்கு எதிராக, மக்களுக்கு நீதி கிடைக்க அரசு மற்றும் சமூகவிரோதிகளுக்கு எதிராகவும் போராடியும் வந்திருக்கின்றார். பணிக்கான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தினசரி அருகிலுள்ள மணிமுத்தாறு ஆற்றுப்பகுதிக்கு சென்று ஆடுமேய்ப்பது வழக்கமான பணிகளில் ஒன்று. இந்நிலையில், திங்களன்று மாலை வேளையில் மணிமுத்தாறு ஆற்றுப்படுகையில் பிணமாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி.விசாரணையை முடிக்கிவிட்ட நிலையில், " திருநாவுக்கரசின் சாவில் மர்மம் இருக்கின்றது. வீடியோ கேமிராவில் பிரேதப் பரிசோதனையை பதிவு செய்தல் வேண்டும். அதுபோல் இது கொலை என வழக்குப்பதிவு செய்யவேண்டுமென," கோரிக்கை வைத்து சடலத்தை வாங்காமல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் அவரது உறவினர்கள்.

incident

Advertisment

"சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக அப்பா போராடி வருபவர். 2018ம் ஆண்டு கல்லல் காவல் நிலையத்திலிருந்த இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் மீது இவர் கொடுத்த புகார் தற்பொழுது விசாரணைக்கு வந்திருக்கின்றது. ஞாயிற்றுக்கிழமை அதற்காக போலீசார் வந்து விசாரித்துவிட்டு சென்றிருக்கின்றார்கள். இவரை ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி மிரட்டியும் இருக்கின்றனர் இவர் போகவில்லை. இந்த நிலையில் கண்கள் தோண்டப்பட்டு, அவரது மர்ம உறுப்பு நசுக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டிருக்கின்றார். இது கொலையே.!!!" என்கிறார் அவரது மகளான வழக்கறிஞர் அறிவுசெல்வி.

இதே வேளையில், ஆடு ஒன்றும் அங்கு வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டதும் தெரியவர அதனையும் மீட்டுள்ளனர் சம்பந்தப்பட்ட எல்கைக்குட்பட்ட காவல்துறையினர். இது இப்படியிருக்க, இவர் கொலையுண்ட பகுதியில் சமீபகாலமாக மணல் திருட்டும் பெருமளவில் நடந்துள்ளது. இதில் கொரண்டி, தேவப்பட்டு மற்றும் கல்லல் பகுதியினை சேர்ந்தவர்களே சம்பந்தப்பட்டிருக்கின்றனர். அவர்களே இந்தக் கொலையை செய்திருக்க வாய்ப்புண்டும் எனவும் பரவலாக பேசப்படுகின்றது. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

social workers sivagangai murder
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe