PALLADAM

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டம்பாளையம்என்ற கிராமத்தில் தெய்வசிகாமணி (வயது 76) என்பவரும், அவரது மனைவி அமலாத்தாள் (வயது 70) மற்றும் மகன் செந்தில்குமார் (வயது 46) ஆகியோர் பண்ணை வீட்டில் வசித்து வந்தனர். இத்தகைய சூழலில் கடந்த 29.11.2024 அன்று தோட்டத்திற்கு வந்த மர்ம நபர்கள் முதலில் தெய்வசிகாமணியை வெட்டி கொலை செய்ததோடு, அவரை காப்பாற்ற முயன்ற அமலாத்தாள் மற்றும் செந்தில்குமார் ஆகியோரையும் மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதனையடுத்து அன்று (29.11.2024 ) அதிகாலை அவர் வீட்டுக்கு வந்த சவரத் தொழிலாளி ஒருவர், வீட்டில் இருந்த 3 பேரும் வெட்டி கொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Advertisment

இது குறித்து அவிநாசிபாளையம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதோடு பல்லடம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாய் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். நகை பணத்திற்காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுபோலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை, தாய் மற்றும் மகன் என மூன்று பேரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அதிமுக மட்டுமில்லாது பல்வேறு எதிர்க்கட்சிகளும் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தன. அதேபோல் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து காவல்துறைக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுபுறம் போலீசார் தெய்வசிகாமணியின் தோட்டத்தில் வேலை செய்தவர்கள் மற்றும் அங்கு அடிக்கடி வருவோர்கள் போவார்கள் என பலரிடமும் விசாரணை நடத்தினர். இருப்பினும் இந்த வழக்கில் முன்னேற்றம் இல்லாத சூழலே இருந்தது. இந்நிலையில் புதிதாக போலீசாருக்கு கிடைத்த தகவல்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில்குமார் ஆறு வருடங்களுக்கு முன்பு பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அதைவிட்டுவிட்டு பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இருப்பினும் பொருளாதார தேவைக்காகதனக்கு சொந்தமான தோட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறார். அதில் இருவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த நபர் தொடர்பான சொத்துப்பத்திரங்கள் செந்தில்குமார் வீட்டில் இருந்துள்ளது. அதைக் கைப்பற்றுவதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனாலும்கொலை நடந்து 12 நாட்கள் ஆகியும் தீர்க்கமான ஆதாரம் இல்லாமல் தவித்து வருகிறது காவல்துறை.

Advertisment