Advertisment

கடலில் மிதந்த மர்மப்பெட்டி; கடத்தலை கண்டுகொள்ளாத காவல்துறை அவலம்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நாளொரு வண்ணம் பொழுதொரு கடத்தல் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

Advertisment

அந்தவகையில் வேளாங்கண்ணி அருகே கடலில் மிதந்து வந்த மரப்பெட்டியில் ஹெராயின் பொட்டலங்கள் இருந்ததை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisment

Mystery box floating in the sea in vedaranyam

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள செருதூர் கடலில் நேற்று இரவு மரத்தினாலான பெட்டி ஒன்று மிதந்துவந்தது. அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மிதந்துவந்த பெட்டியை பார்த்து "கடலில் மர்ம பெட்டி மிதந்து வருவதாக" கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அந்த மர்ம பெட்டியை கைப்பற்றி சோதனை நடத்தினர், அந்த பெட்டியில் ஹெராயின் பொட்டலங்கள் அடுக்கிவைத்து கடத்தியிருப்பது தெரியவந்தது. அந்த பெட்டியை கைப்பற்றி சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். இது எங்கிருந்து வந்தது எவ்வளவு மதிப்பிலான ஹெராயின் உள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் கண்டைனர் லாரியில் கஞ்சா மூட்டைகளை கடத்திவந்ததை பின்தொடர்ந்துவந்த சென்னையை சேர்ந்த அதிகாரிகள் கைப்பற்றினர். அதற்குள் இந்த மர்ம ஹெராயின் பிடிபட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள போலீஸார் என்ன செய்கிறார்கள் என ஆதங்கபடுகிறார்கள் பொதுமக்கள்.

ty

இதுகுறித்து விவரம் அறிந்த மீனவர்களிடம் விசாரித்தோம்,"கடத்தல் இன்று நேற்று நடப்பதல்ல அரைநூற்றாண்டு காலமாக நடந்து வருகிறது, கூப்பிடும் தூரத்தில் இருபது நிமிட பயணத்தூரத்தில் இலங்கை இருப்பது கடத்தல்காரர்களுக்கு சாதகமாகிவிட்டது. ராஜீவ் காந்தி கொலைக்கு முன்பு அதிகமாக இருந்தது. பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது ஆனால் அந்த பாதுகாப்பு சமீபகாலமாக கேள்விக்குறியாகிவிட்டது.

மீனவர்களின் போர்வையில் கடத்தல் தினசரி நடந்துகொண்டுதான் இருக்கிறது. ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட ஒருவரின் வாரிசும், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த தோப்புத்து பிரமுகர் ஒருவரும் கடத்தலில் கொடி கட்டிப்பறக்கின்றன. காவல்துறை யாராவது ஒருவருக்கு ஆதரவாக இருப்பார்கள். ஒருவருக்கு ஆதரவாக இருக்கும்போது ஆதரவு இல்லாதவர் போட்டு கொடுத்துவிடுவார். ஆக காவல்துறையின் அனுமதியும், ஆதரவும் இல்லாமல் ஒரு போதும் இந்த கடத்தல் நடக்காது, நடத்தவும் முடியாது. காவல் துறையின் கெடுபிடி குறைந்துவிட்டது. கையூட்டு பெறுவதற்காகவே இந்த தொழிலை ஊக்கப்படுத்துகின்றனர்." என்கிறார் வேதனையாக.

sea police Vedaranyam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe