The mystery behind the death of actress Chitra should be discovered .. Hemant's father petitions the Commissioner of Police ..!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று ஹேமந்தின் தந்தை சென்னை காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில், என் மருமகள் தற்கொலையில் என் மகனுக்கு தொடர்பு இல்லை. அதற்கு முன்னதாக அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருந்த புகைப்பட ஆதாரங்கள் எல்லாம் இருக்கிறது. இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டு பின் பதிவு திருமணமும் செய்யப்பட்டது.

Advertisment

அவரது மரணத்திற்கு முன்தினம்தான், அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த மண்டபம் சென்று பார்த்துவந்தோம். அதனால், இந்த மரணத்தின் பின் இருக்கும் மர்மத்தை விசாரணையை தீவிரப்படுத்தி காவல்துறை கண்டறிய வேண்டும். என குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.