Advertisment

காஞ்சிபுரத்தில் மர்மப்பொருள் வெடித்த விபத்தில் இருவர் உயிரிழப்பு!

காஞ்சிபுரத்தில் மர்மப்பொருள் வெடித்து விபத்தான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொரு இளைஞரும் உயிரிழந்துள்ளார்.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் கங்கை அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவில் குளத்தை தூர்வாரும் பணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதனை தூர்வாரும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் தூர் வாரும் பணி நடந்து கொண்டிருக்கும் அந்த பகுதியில் சென்று மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர். அப்போது குப்பைகள் அனைத்தும் முழுமையாக தூர்வாரபட்டிருந்ததால் அந்தப் பகுதியில் ஒரு மரப்பெட்டி ஒன்று இளைஞர் கண்ணில்பட்டது.

Mystery accident in Kanchipuram

அந்த மர பெட்டியை எடுத்து கோவிலின் கரை பகுதியில் அமர்ந்து பெட்டியை திறக்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது பயங்கர சத்தத்துடன் அந்த பெட்டி வெடித்து சிதறியது. அதிலிருந்தபால்ரஸ்கள், சில இரும்பு துகள்கள் போன்றவை அருகிலிருந்த கோயில் சுவற்றின் மீதுபட்டு கோவில் சுவர்களில் காயங்கள் ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 6 நபர்களில் சூர்யா என்கின்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே குடல் சரிந்து மயக்கமுற்று கீழே விழுந்தார். ஊர்மக்கள் சத்தம்கேட்டு அலறியடித்து காயம்பட்ட அனைவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

Advertisment

Mystery accident in Kanchipuram

சிகிச்சை பலனளிக்காமல் சூர்யா என்கின்ற இளைஞர் பரிதாபமாக நேற்றே உயிரிழந்த நிலையில், தற்போது திலீபன் என்ற மற்றொரு இளைஞரும் உயிரிழந்துள்ளார். வெடித்த பொருள் என்னவென்று ஆராய வெடிகுண்டு நிபுணர்களும் வர வைக்கப்பட்டுசோதனை செய்ததில் அது ராக்கெட் லாஞ்சர் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கிய திருமால், யுவராஜ் ஆகியோர் மேலும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். ஜெயராமன், விஸ்வநாதன் ஆகியோர் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

hospital accident kanjipuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe