ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திகனாரை கிராமம் நாயக்கர் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ராஜேந்திரன் (19) சுமைதூக்கும் வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று திகனாரை அருகே உள்ள புதுகுட்டை ஆலமரத்தடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுபற்றி கிராம மக்கள் தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தாளவாடி போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் ராஜேந்திரன் உடலில் தீ காயங்கள் இருந்தது தெரியவந்தது. உடலை பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தாளவாடி போலீசார் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.