Advertisment

குடியிருப்பு பகுதியில் சுற்றும் மர்ம பெண்! பதட்டத்தில் பகுதிவாசிகள்! 

Mysterious woman roaming around the residential area! Area residents in anxiety!

Advertisment

திருச்சி மாவட்டம், விராலிமலை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, யாரும் இல்லாத சமயம் பார்த்து பூட்டை உடைக்க முயற்சி செய்வதும், பூட்டை உடைக்க முடியாமல் போனால், வீட்டின் வெளியே இருக்கும் பொருட்களை திருடி செல்லும் சம்பவங்களும் அவ்வப்பொழுது நிகழ்ந்து வருகிறது.

இதனை யார் செய்வது என தெரியாமல் அப்பகுதி குடியிருப்புவாசிகள் குழம்பி வந்த நிலையில், தற்போது ஒரு சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது. அதில், ஒரு மர்ம பெண் உள்ளார். இதனால், அவர் மீது அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் வலுக்க துவங்கியுள்ளது.

விராலிமலை வடக்கு தெருவை சேர்ந்த அன்பழகன் என்பவர், கடந்த வியாழக்கிழமை வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டிற்கு வெளியே இருந்த பாத்திரங்கள், இரும்பு தளவாட பொருட்கள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவை பார்த்துள்ளார். அதில், மர்ம பெண் ஒருவர், தன் வீட்டை இரண்டு முறை அங்கும் இங்கும் சென்றவாறு நோட்டமிடுவதும், சட்டென்று வீட்டின் காம்பவுண்டுக்குள் உட்புகுவதும் தெரியவந்தது. இதையடுத்து இப்பெண் தான் பல்வேறு பகுதிகளில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். முயற்சி தோல்வி அடையும் பட்சத்தில் கையில் கிடைக்கும் பொருட்களை களவாடி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் குடியிருப்பு வாசிகள் மத்தியில் வலுத்துள்ளது. எனவே, மர்ம பெண்ணை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe