Mysterious substance explosion in Kolathur

Advertisment

கொளத்தூரில் வீடு ஒன்றில் மர்மப்பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூர் முருகன் நகர் 2வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் - சிவப்பிரியா தம்பதி. இவர்களுக்கு ஆதித்ய பிரணவ் என்ற மகன் உள்ளார். அவர்பிளஸ் டூ படித்து வந்தார். அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட ஆதித்ய பிரணவ் பல்வேறு கெமிக்கல்கள் பயன்படுத்தி கண்டுபிடிப்புகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த வீட்டில் இருந்து திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மாணவன் ஆதித்ய பிரணவ் உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பாக வேதிப் பொருட்களை பயன்படுத்திய போது விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மீண்டும் அதே வீட்டில் மர்மப் பொருள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு தீயணைப்பு வாகனமும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகப்படியான போலீசார் அங்கு குவிந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.