Skip to main content

சிவன் கோயிலில் இருந்து 51 ஆண்டுகளுக்கு முன் மாயமான சம்பந்தர் சிலை

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

Mysterious Sambandar statue from Shiva temple 51 years ago!

 

கும்பகோணத்தில் உள்ள தாண்டம்தோட்டம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் இருந்து 51 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சம்பந்தர் சிலையை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அமெரிக்காவில் கண்டுபிடித்தனர். 

 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள தாண்டம்தோட்டம் கிராமத்தில் உள்ள நாதனபுரேஷ்வரர் சிவன் கோயிலில் இருந்த சம்பந்தர் சிலை, கடந்த 1971- ஆம் ஆண்டு திருடப்பட்டது. சிலைத் திருட்டு குறித்து, கடந்த 2019- ஆம் ஆண்டு சிலைத் தடுப்பு பிரிவினரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் சிலைப் புகைப்படத்தை வைத்து, பல்வேறு அருங்காட்சியகங்கள், ஏல மையங்களில் அதிகாரிகள் தேடுதலில் ஈடுபட்டனர். 

 

அப்போது, அமெரிக்காவில் உள்ள பழங்கால கலைப் பொருட்களை விற்பனை செய்யும், ஏல நிறுவனத்தின் இணையதளத்தில் காணாமல் போன சம்பந்தர் சிலையைக் கண்டனர். அதைத் தொடர்ந்து, இரண்டு சிலைகளும் ஒன்றுதானா என்பதை அரிய புகைப்பட நிபுணர்களுக்கு, அதன் புகைப்பட நகல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

 

ஆய்வுக்கு பின் இரண்டு புகைப்படங்களில் இருப்பதும் ஒரே சிலைதான் என்பதை உறுதி செய்தனர். இதன் பின்னர் அமெரிக்காவில் உள்ள சிலையை இந்தியாவிற்கு கொண்டு வர உதவுமாறு அமெரிக்காவிற்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கோரிக்கை கடிதம் அனுப்பினர். யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் படி விரைவில் சிலையை மீட்டு, கும்பகோணத்தில் உள்ள சிவன் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.