Mysterious person who stolen at temple

Advertisment

நாகை அருகே கோயிலின் முகப்புப் பகுதியிலிருந்த உண்டியலின்பூட்டைஅரிவாள் கொண்டு உடைத்து பணத்தை எடுத்துச் செல்லும் மர்ம நபரின் செயல் சி.சி.டி.வி. காட்சிகளில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்துள்ள காமேஸ்வரம் தண்ணீர்பந்தல் அருகே பழமை வாய்ந்த அன்பழகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் முகப்புப் பகுதியிலுள்ள உண்டியலை நேற்று நள்ளிரவு மழை நேரத்தில், மர்ம நபர் ஒருவர் சாமி கும்பிடுவது போல் சென்று அரிவாளைக் கொண்டு உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தைத்திருடிவிட்டு தப்பிச் சென்றார். அவர் திருடும் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து இந்தக் காட்சிகளோடு கீழையூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இது குறித்தான காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.