Advertisment

செயினை பறித்த மர்ம நபர்... படுகாயமடைந்த பெண்!

Mysterious person who snatched the chain

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள ராஜ வீதி பகுதியை சேர்ந்தவர் எழிலரசி. இவருக்கு சொந்தமான மளிகைக்கடை அம்மன் நகர் பகுதியில் இயங்கி வருகிறது.

Advertisment

இந்நிலையில் நேற்று தன்னுடைய கணவர் சவரிமுத்துக்கு மதிய உணவு எடுத்துச் சென்றார். பின்னர் எழிலரசி மட்டும் கடையில் தனியாக இருந்த நிலையில் கடைக்கு வந்த மர்ம நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தாலி செயினை பறிக்க முயன்றார். ஆனால் எழிலரசி தனது செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் ஆத்திரத்தில் அந்த மர்ம நபர் கையில் வைத்திருந்த கத்தியால் எழிலரசியின் கன்னத்தை கிழித்து உள்ளார்.

Advertisment

ரத்தம் சொட்ட வலியால் எழிலரசி கூச்சலிட்டார். இதனால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் எழிலரசி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

chain snatching trichy woman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe