The mysterious person who followed from the bank to the house! Rob the girl

Advertisment

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி கீழவாசல் கீழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா (46). இவர், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு பிரபல வங்கியில் நகையை அடகு வைத்து 1 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். இதை வங்கியின் உள்ளேயே இருந்து பார்த்த அடையாளம் தெரியாத வாலிபர், அவர் வீட்டிற்கு செல்லும் வரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

பிரியங்கா தனது வீட்டிற்கு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தும் போது அவரிடம் இருந்த 1 லட்ச ரூபாய் பணத்தை வழிப்பறி செய்து தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பி சென்றுவிட்டார். இது குறித்து பிரியங்கா ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.