/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2610.jpg)
நாகப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமில் அத்துமீறி நுழைந்த மர்ம நபரிடம், மேப் மற்றும் காம்பஸ் உள்ளிட்ட பொருட்கள் இருந்தால் தீவிரவாதியாக இருக்கலாம் என்கிற சந்தேகத்துடன் போலீசார் பிடித்து விசாரித்துவருகின்றனர்.
நாகை துறைமுகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளின் ஊடுருவல், தீவிரவாதிகளின் நடமாட்டம், எரிபொருள் கடத்தல் உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்காக இந்தியக் கடற்படை முகாம் அமைக்கப்பட்டது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_702.jpg)
இந்தநிலையில் நேற்று அதிகாலை, துறைமுகத்தின் பாதுகாப்பு சுவர்களைத் தாண்டி மர்மநபர் ஒருவர், கடற்படை முகாமிற்குள் நுழைந்தார். அப்போது கண்காணிப்பில் இருந்த கடற்படை வீரர்கள் அவரைச் சுற்றிவளைத்துப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான பதிலே அந்த நபரிடமிருந்து வந்திருக்கிறது. தீவிரவாதியாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் பாதுகாப்பான இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை செய்துவருகின்றனர்.
விசாரணையில், அந்த நபரிடம் இருந்த பையில் 6 (மேப்) வரைபடங்கள், திசை காட்டும் காம்பஸ் கருவி, அதிக அளவிலான பணம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை இருந்துள்ளன. இதனையடுத்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான போலீசார், க்யூ பிரிவு போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உள்ளிட்டோர் பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_196.jpg)
முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சுக்லா என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சுற்றுலா வந்ததாகவும், வேலை தேடி வந்ததாகவும், உணவு தேடி வந்ததாகவும், மாறிமாறி கூறுகிறார். அதை வைத்தே பிடிபட்ட நபர் மீது சந்தேகம் அதிகரித்துள்ளது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’ அமைப்பின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம், திருச்சியிலிருந்து ரா உளவு அமைப்பின் அதிகாரிகள் விரைந்துவந்துள்ளனர். எட்டுமணி நேரத்திற்கு மேலாகவிசாரணை நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உளவுப்பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு பின்பு பிடிபட்ட அபிஷேக் சுக்லா பற்றிய முழு விவரம் தெரியவரும் என்கிறார்கள் போலீசார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)