Advertisment

பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்! சிசிடிவி காட்சி சிக்கியது!

Mysterious person who broke the lock and stole!

Advertisment

திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (34), அப்பகுதியில் ஆம்னி பேருந்துகள், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், வழக்கம்போல் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் காலையில் வந்து கடையைத் திறப்பதற்காக பார்த்துள்ளார்.

அப்போது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறி அனைத்தும் ஆங்காங்கே கிடந்தன. மேலும் கல்லாவில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் பணமும் கொள்ளை போயிருந்தது. அத்துடன் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகும் கம்ப்யூட்டரையும் மர்ம நபர்கள் தூக்கி சென்றிருப்பது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி ஆய்வு செய்தனர். அப்போது பிரபாகரனின் பக்கத்துக் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் மர்ம நபர் ஒருவர் வந்து பிரபாகரனின் கடையில் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. அதனைக் கைப்பற்றிய காவல்துறையினர் அதன் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Theft trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe