Mysterious person stole eggs from the Anganwadi center!

Advertisment

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் ரோடு திருப்பதி லே-அவுட் பகுதியில் ஒரு குழந்தைகள் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் 20 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மதிய உணவுக்காக வைக்கப்பட்டிருந்த 80 முட்டைகளில், 50 முட்டைகள், ஒரு சிலிண்டர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் ஒருவரின் சேலை உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை முடித்து இன்று காலை அங்கன்வாடி அறையை திறந்து பார்க்கும்போது 50 முட்டை, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதை கண்டு அங்கன்வாடி பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தைகள் மதிய உணவுக்காக வைக்கப்பட்டிருந்த முட்டை உள்ளிட்ட பொருட்களை திருடிய மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.