Advertisment

போலீஸ் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையன் - அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி

bike theft

சென்னையில் தலைமைக் காவலர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன்-ஜெகதம்மாள் தம்பதி. ஜெகதம்மாள் அம்பத்தூர் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராகப் பணியாற்றி வருகிறார். அவரது கணவர் மணிகண்டன் தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்புள்ள பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றுள்ளார். இன்று காலை எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணமால் போனதைக் கண்டு மணிகண்டன்-ஜெகதம்மாள் தம்பதி அதிர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, ஜெகதம்மாள் அளித்த புகாரின் பேரில் கள்ளிக்குப்பம் பகுதி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகிள்ளது. அதில், அதிகாலை 2.53 மணியளவில் மணிகண்டன்-ஜெகதம்மாள் தம்பதியின் வீட்டு பார்க்கிங்கில் நுழையும் மர்ம நபர் ஒருவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்கின் ஸ்டேரிங்கை காலால் உடைத்து பைக்கை திருடிச் செல்வது பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சியின் உதவியுடன் கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe