Advertisment

கடத்திய தங்கத்தை பயத்தில் விட்டு சென்ற மர்ம நபர்!!

Mysterious person who kept the stolen gold on the office desk

துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணிகளை, வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவந்தனர். அப்போது மருத்துவ உதவி மைய அலுவலக மேஜை மீது இருந்த கைப்பையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisment

அந்தப் பையை மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை செய்த பின்னர், அதைப் பிரித்தனர். அதில் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 900 கிராம் தங்கம் இருந்தது. சுங்கத்துறை அதிகாரிகளின்சோதனைக்குப் பயந்து துபாயிலிருந்து வந்த பயணி யாரோ ஒருவர் இங்கு வைத்துவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில், அந்தப் பையைக் கொண்டுவந்தவர் யார் என்பது குறித்து அங்கு பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர்.

Advertisment

Officer smuggled trichy airport
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe