mysterious person as corona medicine incident

Advertisment

'கரோனாவிற்கு எதிரான ஆயுதம் தடுப்பூசி ஒன்றே' என அரசு சார்பிலும், மருத்துவர்கள் சார்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் தவறான மருந்துகளைகரோனாவிற்கு எடுத்துக் கொள்வதால் நடைபெறும் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கரோனா மருந்து எனக் கூறி மர்மநபர் கொடுத்த மாத்திரையை சாப்பிட்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை பெருமாள்மலையில்கரோனா மருந்து என குப்பம்மாள் என்ற மூதாட்டியிடம் மர்மநபர் ஒருவர் மாத்திரை ஒன்றை கொடுத்துள்ளார். மர்மநபர் கொடுத்தஅந்த மாத்திரையை சாப்பிட்ட மூதாட்டி குப்பம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் ஏற்கனவே கரோனா மருந்து என மாத்திரை சாப்பிட்டு மல்லிகா என்பவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.