Advertisment

அரசு பேருந்துகளின் கண்ணாடியை உடைக்கும் மர்ம நபர்கள்! 

Mysterious people who break the glass of government buses!

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் பகுதியில் மதியம் 2 மணிக்கு பிறகு சென்ற 5க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை எதிரே தலைக்கவசம் அணிந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகளில் கல்வீசி உடைத்துவிட்டு சென்றுள்ளனர்.

பேராவூரணியிலிருந்து அதிராம்பட்டினம் சென்ற நகரப் பேருந்து ரெண்டாம்புலிக்காடு அருகே சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் கண்ணாடி உடைக்கப்பட்டது. அதே போல பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை சென்ற ஒரு அரசு பஸ் மர்ம நபர்களால் கண்ணாடி உடைக்கப்பட்டது. அதே போல பட்டுக்கோட்டையிலிருந்து மதுரை சென்ற அரசு பேருந்து பட்டுக்கோட்டை மகாராஜா சமுத்திரம் ஆற்றுப் பாலம் அருகே அதே மர்ம கும்பலால் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இதே போல சுமார் 5க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக பஸ் கண்ணாடிகளை உடைக்கிறார்கள் என்று போலீசார் விசாரணை செய்து மர்ம நபர்களை பிடிக்க அவர்களின் வாகன எண்களை வைத்து தேடி வருகின்றனர்.

puthukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe