Advertisment

இரவு நேரத்தில் சுற்றும் மர்ம நபர்கள்; அச்சத்தில் பொதுமக்கள்

Mysterious people roam the streets of Sathyamangalam at night

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.சத்தியமங்கலத்தில் முக்கிய வீதிகளான எஸ்.ஆர்.டி கார்னர், வடக்குப்பேட்டை, கோட்டு வீராம்பாளையம், காந்தி நகர், மணிக்கூண்டு உள்ளிட்ட முக்கிய வீதிகள் உள்ளன.இந்நிலையில் நேற்று மணிக்கூண்டு அருகே உள்ள பெரிய பள்ளிவாசல் வீதியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் இரண்டு பேர் அங்கும் இங்குமாக பரபரப்பாக நடந்து செல்வதும் ஓடுவதும் அங்கிருந்த சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகியுள்ளது.

Advertisment

இதனை அடுத்து காலையில் வழக்கம் போல் சி.சி.டி.வி கேமரா காட்சிகளைப் பார்த்த போது மர்ம நபர்கள் நடமாட்டத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர், இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்குத்தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மர்ம நபர்கள் வடமாநிலத்தவராக இருக்கலாம் என்றும், குற்றச் சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதை அடுத்து சத்தியமங்கலத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் இரவு நேரம் ரோந்துப் பணியைத்தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisment

midnight Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe