திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் அய்யன்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் மீது மர்ம நபர்கள் சேற்றை வாரி இறைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அய்யன்கோட்டை ஊராட்சி மன்றத்தில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இடையே நிர்வாகம் தொடர்பாக பிரச்சனை இருந்துவருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மீது சேற்றை வாரி இறைத்துள்ளனர். மேலும், மாட்டுச் சாணத்தையும் ஊராட்சி மன்ற அலுவலகம் மீது வீசிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தர்ராஜன், பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.