Published on 01/09/2021 | Edited on 01/09/2021

திருச்சி மாவட்டம் துறையூர் கொப்பம்பட்டி பகுதியில் உள்ள பட்டவர் கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் தங்களுடைய கைவரிசையைக் காட்டியுள்ளனர். நேற்று இரவு பூஜைகள் முடிந்து கோவில் நடை முழுமையாக மூடப்பட்டு பூஜை செய்யும் பூசாரிகள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் நடு இரவில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து கோவிலுக்குள் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் கோவிலில் சாமிக்கு அணிவிக்க வைத்து இருந்த இரண்டு பவுன் முறுக்கு செயின், ஒன்றரை பவுன் சிறிய செயின், அரை பவுன் டாலர், சிறிய தங்கக் கிரீடம், வெள்ளி மாலை, வெள்ளி கொடைகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.