Skip to main content

வாழை மரங்களை வெட்டி அழித்த மர்ம நபர்கள்! நடவடிக்கை எடுக்க சொன்ன கலெக்டர்!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

Mysterious people who cut down and destroyed the banana trees! Collector told to take action

 

போடி அருகே உள்ள பரமசிவன் கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள புது காலனியில் வசிப்பவர்கள் பூமிநாதன், பரமேஸ்வரன், பாலசுப்பிரமணியம், சந்திரன் மற்றும் நரேந்திரநாத். இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தை சுப்புராஜ் நகரைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் பாலு கடந்த 1994ஆம் ஆண்டிலிருந்து குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவருகிறார். கடந்த 27 ஆண்டுகளாக தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து வாழை மரங்கள், தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பாலு பயிரிட்டு விவசாயம் செய்துவருகிறார்.

 

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர்  இரவு நேரங்களில் திடீரென்று தோட்டத்துக்குள் புகுந்து 4,500 வாழை மரங்களை வெட்டி சாய்த்துவிட்டு ஓடிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பாலு, போடி நகர் காவல் நிலையத்திலும் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடமும் புகார் மனு அளித்தார். மேலும் அந்த மனுவில், மீதமுள்ள 3,500 வாழை மரங்களையும் வெட்டிவிடுவார்கள். அதனால் எங்களுக்கு உயிர் பயம் ஏற்பட்டுள்ளது என மனு அளித்துள்ளார். மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் முரளிதரன், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கும் பரிந்துரை செய்துள்ளார். இச்சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.