திருச்சி பெட்டவாய்த்தலை, கருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி கோபால் (52). இவர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர். இந்நிலையில், இன்று (06.10.2021) அதிகாலை கோபால் தனது வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது கோபாலிடம் பேச வேண்டும் என வந்த சிலர் அவரை அழைத்துச் சென்று வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதனையறிந்த லாலாபேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லாலாபேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோபாலுக்கு ஏற்கனவே கொலை வழக்கில் தொடர்பு இருப்பதால் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.