Advertisment

பண்ணாரி அம்மன் கோவில் ஊழியர் மர்ம உயிரிழப்பு- போலீசார் விசாரணை

 Mysterious of Pannari Amman temple employee- Police investigation

பண்ணாரி அம்மன் கோவில் ஊழியர் மர்மமான நிலையில் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராஜன் நகரைச் சேர்ந்தவர் ஜெயபூர்ணம் (57). இவர் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் கடந்த 10 வருடங்களாக இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜெயபூர்ணம் கோபி பகுதியைச் சேர்ந்த நண்பரான கவுரிசங்கர் என்பவருடன் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் ஆசனூர் சென்றார். அங்குள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கி இருந்தார்.

Advertisment

நேற்று காலை ஜெயபூர்ணம் தனது படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை. இதனால் 108 அவசர கால ஆம்புலன்சுக்கு விடுதி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவக் குழுவினர் ஜெயபூர்ணத்தை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. அவர் உயிரிழப்பிற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Investigation police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe