/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/A4934.jpg)
ஈரோடு மாவட்டம் திண்டல் அடுத்த காரப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா (74). இவரது மகன் மணியுடன் வசித்து வருகிறார். சகுந்தலா உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று பின்னர் மீண்டும் வீட்டுக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி மாலை திண்டல் சென்று வருவதாகக் கூறி விட்டுச் சென்ற சகுந்தலா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரைப் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சகுந்தலா மகன் மணி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்து மாயமான தனது தாயை மீட்டுத்தர வேண்டும் என புகார் மனு அளித்திருந்தார்.அதன் பேரில் போலீசார் சகுந்தலாவை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று சகுந்தலாவின் மகன் மணி செல்போனில் ஒரு புகைப்படத்துடன் தகவல் வந்தது. அதில் இந்த மூதாட்டி நசியனூர் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்து இறந்துவிட்டதாகவும் இவரது உடல் தற்போது பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் வந்திருந்தது. செல்போனில் வந்திருந்தபுகைப்படம் தனது தாயின் படம் என்பதை அறிந்து மணி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று தாயின் உடலைக் கண்டு கதறி அழுதார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)