Mysterious mob  the temple priest!

ஈரோடு மோளகவுண்டம் பாளையம் ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்தவர் 45 வயதானசீனிவாசன். இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சமயசங்கிலியில் உள்ள பெருமாள் கோவிலில் அர்ச்சகராக இருக்கிறார். இந்த நிலையில், சீனிவாசன் நேற்று முன்தினம் மாலை அவரது டூவீலரில் கோயிலிருந்து சென்று கொண்டிருந்தார்.

Advertisment

மோளகவுண்டம் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த நான்கு நபர்கள் சீனிவாசனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, அந்த நான்கு பேரும் சீனிவாசனை கட்டையாலும், கைகளாலும் சரமாரியாக அடித்து உதைத்தனர். சீனிவாசன் வலி தாங்க முடியாமல்கூச்சல் போட்டதால், அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

Advertisment

அதைப் பார்த்த அந்த நான்கு பேரும் தப்பி ஓடியுள்ளனர். அந்த மர்மநபர்கள் தாக்கியதில் சீனிவாசனுக்கு தலை, கால், முகம் போன்ற இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சீனிவாசனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அர்ச்சகர் சினிவாசன். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார், சீனிவாசனிடம் விசாரணை நடத்தி, அவரது புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய நான்கு மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.