The Mysterious Man Who Strikes at Midnight; Citizens making requests to the police

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி 17வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான கமலா ரைஸ் மில் வீதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ஒரு சிறிய வீதியில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் சட்டை அணியாமல் வெறும் டவுசருடன் ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டவாறு, பூட்டியுள்ள வீடுகளைக் கண்காணித்துச் செல்வது அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

Advertisment

ஏற்கனவே இதேபோன்று இரண்டு முறை மர்ம நபர் நடமாட்டம் இருந்ததாகவும், தற்போது மூன்றாவது முறையாக நள்ளிரவில் மர்ம நபர் நடமாட்டம் இருப்பதாகவும் கூறி கமலா ரைஸ் மில் வீதியை சேர்ந்தவர்கள் மர்ம நபர் நடமாட்டம் குறித்த சிசிடிவி கேமரா பதிவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அருகில் உள்ளவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

நள்ளிரவில் மர்ம நபர் நடமாட்டம் காரணமாக கமலா ரைஸ் மில் வீதி, மேட்டு வளவு, புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் சிசிடிவி கேமரா பதிவில் உள்ள நபர் குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.