Mysterious lost of mother and child

வேலூர் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நந்தகுமார் - நித்யஸ்ரீ(25) தம்பதியர். இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணமான நிலையில் இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு ஆண் மகன் குழந்தை உள்ளது. இதனிடையே, நந்தகுமாருக்கும் நித்யஸ்ரீக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் நித்யஸ்ரீயும், யோகேஸ்வரனும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த நித்யஸ்ரீயின் உறவினர்கள் உடல்களை பார்த்துக் கதறி அழுதனர். அப்போது உடல்கள் அருகே நந்தகுமாரும் இருந்த நிலையில் அவரை நித்யஸ்ரீயின் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

Advertisment

பின்னர் அங்கிருந்தவர்கள் படுகாயங்களுடன் இருந்த நந்தகுமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

போலீசார் கூறுகையில், “நந்தகுமாரும் நித்திய ஸ்ரீயும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். மூன்றாவதாக பிறந்த யோகேஸ்வரனும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

Advertisment

நித்தியஸ்ரீயின் கழுத்தில் தூக்குப் போட்டதற்கான அடையாளங்கள் இருக்கிறது. குழந்தை இறப்புக்கான காரணம் கண்டறிய முடியவில்லை. இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனரா? அல்லது குடும்பப் பிரச்சனை காரணமாக குழந்தையை கொன்றுவிட்டு நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.