சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவியும், மாணவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று இரவு இருவரும் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் மாணவனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர், மாணவியை பாலியால் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து மாணவிகோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.