Advertisment

அரை நிர்வாணமாக கோவிலில் புகுந்த மர்ம கும்பல்; வெளியான சிசிடிவி காட்சி

Mysterious gang entered the temple in underwear; CCTV footage revealed

திருவள்ளூர் மாவட்டத்தில் கோவில் ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் கோவில் கருவறையின் கதவை உடைக்கமுடியாமல் திணறும் சிசிடிவி வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ளது சின்னஉப்பலாபுறம் கிராமம்.இந்த கிராமத்தில் பால் முனீஸ்வரர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 24 ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று கொள்ளையடிக்க முயன்றது.

Advertisment

உடலில் துணி இல்லாமல் உள்ளாடை மட்டும் அணிந்தபடி உள்ளே புகுந்தஅந்த கும்பலில் இரண்டு பேர் ஆள் வருகிறார்களா என்பதை உற்று நோக்க,கோவிலின் கருவறையின் கதவை உடைக்க கும்பலை சேர்ந்த மற்றொருநபர் முயன்றார். பல மணி நேரமாக உடைக்க முயன்றும் பூட்டை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் அங்கிருந்து அக்கும்பல் கிளம்பியது. இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

temple thiruvallur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe