நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் காய்ச்சல், வாந்திக்கு 2 மாணவர்கள் பலியானதைத் தொடர்ந்து நகராட்சி மருத்துவத்துறையினர் அங்கு முகாமிட்டு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவிலில் டி.டி.டி.ஏ. பள்ளி வளாகத்தில் மனவளச்சி குன்றியோர் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 45 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் அங்கேயே தங்கிப்படிக்கும் மாணவர்கள் 30 பேர் வரை உள்ளனர். இது தவிர சில மாணவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். அவர்களை அவர்களது பெற்றோர்கள் பள்ளியில் கொண்டுவந்து விட்டு பின்னர் மாலையில் அழைத்துச்செல்வர். தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்துக் கொடுக்கின்றனர். மேலும் வெளியில் இருந்து நன்கொடையாளர்கள் மூலமும் உணவு வழங்குவது உண்டு.

 Mysterious fever in nellai

Advertisment

இந்தநிலையில் அங்கு படித்து வந்த கரிசல்குளத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் மகன் மணிகண்டனுக்கு (13) கடந்த 3 தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனிளிக்காமல் இறந்தார்.

Advertisment

 Mysterious fever in nellai

இதைத் தொடர்ந்து அதே பள்ளியில் பயின்ற ரெட்டியபட்டியைச் சேர்ந்த சண்முகப்பாண்டி மகன் பொன்னுச்சாமி (21) என்ற மாணவருக்கு ஞாயிற்றுக் கிழமை திடீரென்று வாந்தி ஏற்பட்டதாம்.பின்னர் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டதாம். இதனால் அவரை கரிவலம்வந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் அங்கு அவர் இறந்தார்.

 Mysterious fever in nellai

இதனால் சங்கரன்கோவில் நகராட்சியைச் சேர்ந்த சுகாதாரத் துறையினர் இன்று அதிரடியாக அப்பள்ளிக்கு சென்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பள்ளி மற்றும் வளாகத்தைச் சுற்றிலும் மருந்து தெளித்தனர். குடிநீரில் புழுக்கள் ஏதும் உள்ளதா என சோதனையிட்டனர். மேலும் அங்கு மருத்துவ குழு மூலம் அங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற் கொண்டனர். அதில் மேலும் 5 மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனவளர்ச்சிகுன்றியோர் பள்ளியில் பயின்ற இரு மாணவர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட எஸ்.பி. அருண் சக்திகுமார் மற்றும் ஆட்சியர் ஷில்பா அங்கு விரைந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் பேட்டி.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பரிபவுல் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் 2 மாணவர்கள் இறந்தனர் இந்நிலையில் முதலில் இறந்த மாணவன் இதய கோளாறு நோயால் இறந்து விட்டதாகவும் மற்றொரு மாணவன் மனநலிவு நோயால் அந்த மாணவனுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதிஷ் என்றார்.