Mysterious deaths continue in Trichy!

Advertisment

திருச்சி கொள்ளிடம் ஆற்று பாலத்தின் கீழ் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலைத் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்று பாலத்திற்கு விரைந்து சென்ற கொள்ளிடம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இறந்தவர் குறித்தான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது, இறந்த நபருக்கு 40 வயது இருக்கும். நீல நிற கைலி, டீ-ஷர்ட் அணிந்து இருந்தார். இறந்தவர் குறித்தான எந்தத் தகவலும் தெரியவில்லை. மேற்கொண்டு விசாரணை நடைபெற்றுவருகிறது என்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித் குமார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், ரயில் பாலத்தின் கீழ் சடலம் இருந்ததால், இறந்தவர் ரயில் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது ரயிலில் அடிபட்டு துாக்கி வீசப்பட்டு இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை அடித்து கொலை செய்துள்ளனரா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisment

ஏற்கனவே பிப்ரவரி 1ம் தேதி திருச்சி திருவளர்ச்சோலை ரோடு, காவிரி ஆற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த பிணம் யார் என்பது குறித்து துப்பு துலங்க மாநகர போலீசார் திணறி வரும் நிலையில், கொள்ளிடம் ஆற்றில் மற்றொரு ஆண் பிணம் கிடப்பதை மாவட்ட போலீசார் கைப்பற்றி உள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.