Mysterious death of a student in college!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் செயல்பட்டு வரும் பிரபலமான தனியார் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு வேதியியல் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவி ஜெனிலியா கடந்த 17ஆம் தேதி அன்று கல்லூரிக்கு வந்தவர் திடீரென, மர்மமான முறையில் மயக்கமடைந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

அதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர், அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் அவரது, சகோதரி பவித்ராவை அழைத்து உனது சகோதரி மயக்கம் அடைந்துள்ளார். அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி, நிர்வாகம் சார்பில் ஆட்டோ ஒன்று ஏற்பாடு செய்து, ஆட்டோவில் ஜெனிலியாவைப் படுக்க வைத்து பவித்ரா துணையுடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

Advertisment

தனியார் மருத்துவமனையில் ஜெனிலியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்எனக் கூறியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்கள்ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஜெனிலியாவை உடனே தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், பவித்ரா, பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு ஜெனிலியாவின் உடலை அன்றே பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெனிலியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தங்களது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது தங்களுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதுகுறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி தனியார் கல்லூரி வாயிலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.