வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி புதுபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். 40 வயதாகும் இவர் செல்போன் டவர், மின்சார டவர் அமைக்கும் வேலை செய்கிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் மின்சார டவர் அமைக்கும் பணிக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த போது திடீரென உயிரிழந்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7394694274" data-ad-format="link" data-full-width-responsive="true">
இந்நிலையில் அவரது சடலத்தை ஆந்திர போலீசாருக்கு தெரிவிக்காமல் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அவர் பிறந்த கிராமத்திற்கு கொண்டு வந்தனர் டவர் அமைக்கும் பணியை செய்யும் தனியார் நிறுவன ஊழியர்கள். உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கும்போது சண்முகத்தின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7394694274" data-ad-format="link" data-full-width-responsive="true">
இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் கிராமிய போலிசார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அதோடு, பிரேத பரிசோதனைக்காக உடலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சண்முகத்துடன் வேலைக்காக சென்ற நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.