The Mysterious Boy in the Kollidam River; Rescuers in intensive search

Advertisment

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச்சென்று மாயமான பத்தாம் வகுப்பு மாணவனை தீயணைப்புபடையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகில் சுமார் 6 அடி உயர தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்தப் பகுதியில் குளிக்கும் செயலில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் இன்று மதியம் தடுப்பணையில் நிரம்பியுள்ள நீரில் குளிக்க வந்துள்ளார். திடீரென சிறுவன் காணாமல் போன நிலையில் பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மீட்புப் படையினர் தொடர்ந்து சிறுவனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.