மயிலாப்பூர், அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில்உள்ள உண்டியல் திறப்பு மற்றும் காணிக்கைகளைக் கணக்கீடு செய்யும் பணிகளைப்பொதுமக்கள்மற்றும் பக்தர்கள் வலைத்தளத்தில் காணும் வகையில் நேரலை செய்யும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மயிலாப்பூர்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்தா.வேலு மற்றும் பலர் உடன் இருந்தனர்.