Advertisment

'கட்சி சார்பற்ற எம்.எல்.ஏ.வாக என் பணி தொடரும்'- கு.க.செல்வம் அறிவிப்பு 

 'My work as a non-party MLA will continue' - KK Selvam announcement

தி.மு.க. தலைமை மீது ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ.கு.க. செல்வம்அண்மையில்டெல்லியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுடன் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்துபேசினார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைமை கழகம்,தி.மு.க தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் அவர்கள், கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.

Advertisment

இதற்கு எம்.எல்.ஏ. கு.க. செல்வம்பதில் கடிதம் ஒன்றை அளித்தார். அதில், சஸ்பெண்டை வாபஸ் பெறுங்கள். இயற்கை நீதிக்கு விரோதமானது என்பதால் என்னை சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுங்கள். பாஜகவைச் சேர்ந்த பிரதமர் மோடி கலைஞரை நேரில் சந்தித்து அனைவருக்கும் தெரியும்.கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியல்ல.நான் பொய்யாக, அவதூறாக என்ன சொன்னேன் என நோட்டீஸ் கடிதத்தில் இல்லை என விளக்கம் அளித்திருந்த நிலையில், நேற்று திமுகவிலிருந்து கு.க.செல்வம் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதிதி.மு.க எம்.எல்.ஏ செல்வம் உரிய விளக்கம் தராததால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுகவின் அனைத்து அடிப்படை பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க.செல்வம், கட்சி சார்பின்றிஇனி எம்.எல்.ஏ பணி ஆற்ற இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

MLA
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe