anbumani

Advertisment

அண்மையில் வெளியான''சர்கார்'' பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் விவகாரம் தொடர்பாக பல சர்ச்சைகள் கிளம்பிவருகிறது. அந்த போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் என பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமகஇளைஞரணி தலைவர்அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பொதுசுகாதாரத்துறை நடிகர்விஜய் மற்றும் இயக்குனர் முருகதாஸ் சினிமாதயாரிப்புநிறுவனமானசன் பிக்சர் ஆகியோருக்கு போஸ்டரில் உள்ளபுகைபிடிக்கும் காட்சியை நீக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பியது.

இதனைத்தொடர்ந்து விஜய் தமிழன் என்பதால்தான் இந்த விமர்சனம் என பல விதமான விமர்சனங்கள் தொடர்ந்துவர இந்த விமர்சனம் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி விளக்கமளித்துள்ளார். அவர்இதுபற்றி இன்று செய்தியர்களை சந்தித்து பேசுகையில்,

anbumani

Advertisment

விஜய் புகைபிடிப்பது போன்ற போஸ்டரை நீக்கவேண்டும் என கூறியதற்குஅவருடைய ரசிகர்கள்புகைபிடிக்கக்கூடாது என்பதற்காகமட்டுமல்ல அவருக்கும்தான். அவருக்கு புகை பழக்கத்தால் புற்றுநோய் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலும்தான். அவர் நீண்ட காலம் வாழவேண்டும். எனக்கும் விஜய்க்கும்தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது அவருடைய நல்லதிற்காகவும் தான் இந்த எதிர்ப்பு எனகூறினார்,

மேலும் விஜய் தமிழன் என்பதால்தான் விமர்சிக்கிறார்கள் என்ற கேள்விக்கு அவர் தமிழன் என்பதால்தான்விமர்சிக்கிறேன் என்றால் நான் என்ன ஜப்பானியனா என கேள்வி எழுப்பினார்.