/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1057.jpg)
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சியில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ திட்ட முகாமினையொட்டி மஞ்சளாற்று படுகையில் உள்ள குடிநீர் ஆதார கிணறுகளை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
இப்பணியை மேற்கொள்ள பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ், சமூக அமைப்பினருக்கு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட வத்தலக்குண்டு அஜித் ரசிகர்கள், வெள்ளை சீருடையுடன் திரண்டு வந்தனர். குப்பைகளை அகற்றும் பணியை பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தொடங்கி வைத்தார். முகாமில் தன்னார்வலர்கள், சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_333.jpg)
கையில் துப்புரவு உபகரணங்களுடன் களம் இறங்கி அஜித் ரசிகர்கள், குடிநீர் கிணற்றுப் பகுதிகளை சுத்தம் செய்தனர். அவர்கள் வேலை செய்வதை முகநூலில் பதிவிடனர். இதை அறிந்த விஜய் ரசிகர்கள் நாங்களும் களத்துக்கு வருகிறோம் என்று செயல் அலுவலர் தன்ராஜிடம் முறையிட்டனர். அவரோ, ‘வேறொரு இடத்தில் நடக்கும் தூய்மைப் பணியில் தங்களை அழைத்துக் கொள்கிறேன்’ என்று கூறினார். வத்தலக்குண்டு பகுதியில் அஜித், விஜய் ரசிகர்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவுவது அப்பகுதி மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
Follow Us