Advertisment

''என் தமிழ்...'' - காளையுடன் சூர்யா... வைரலாகும் வீடியோ

 '' My Tamil ... '' -Surya with the bull ... Video goes viral!

Advertisment

இன்று சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைத்தெரிவித்து வருகின்றனர். கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கருப்பு நிறம் கொண்ட காளை மாட்டுடன் நடந்து வரும் நடிகர் சூர்யா ''என் தமிழ்... இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்'' எனச் சொன்னபடி நடந்து செல்கிறார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் உரைக்கு பிறகு இந்தி திணிப்பு தொடர்பான பேச்சுக்கள் தமிழகத்தில் மீண்டும் வேகமெடுத்துள்ளது. அண்மையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின், தமிழ் குறித்த பதிவுகள், பேட்டிகள் வைரலான நிலையில், ''என் தமிழ்...'' என்ற சூர்யாவின் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்ற ஜல்லிக்கட்டு தொடர்பான படத்தில் சூர்யா நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

suriya tamil
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe