style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்துக்கட்சி தலைவர்களும் நேரிலும், ட்விட்டரில்நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தார். கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,
என்னுடைய இனிய நண்பர் கலைஞர். கலைஞர் எனும் பல்கலைகழகம் நூற்றை கடந்து வாழவேண்டும் என்பது எனது ஆசைமட்டுமல்ல எல்லோருடைய ஆசையும் அதுவே. நிச்சயமாக அந்த ஆசை நிறைவேறும் எனக்கூறினார்.