Advertisment

தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட், குஜராத் என 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சியின் வாயிலாக தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று புதிதாக துவங்கப்பட்ட வந்தேபாரத் ரயிலில் நெல்லையில் இருந்து மதுரை வரை பயணம் செய்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டிருப்பதாவது; “தென்தமிழக மக்களுக்காக மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் நேரடியாக நான் வைத்த கோரிக்கையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, காணொளிக் காட்சியின் வாயிலாக தொடங்கி வைத்த திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு இரயில் சேவை தொடக்க விழாவில் கலந்து கொண்டு திருநெல்வேலி இரயில் நிலையத்திலிருந்து மதுரை இரயில் நிலையம் வரை பொதுமக்களோடு இணைந்து பயணம் செய்தேன்.

என் சொந்த மாவட்டமான திருநெல்வேலிக்கு வந்தே பாரத் விரைவு இரயில் சேவையை தொடங்கி தென் தமிழக மக்களின் பயணங்களை எளிதாக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.