style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
சென்னை மெரீனாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கானபணிகள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில் இந்த நினைவு மண்டபம் கட்டப்படக்கூடாது என்று பொதுமனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், கடலோர மண்டல விதிகளுக்கு எதிராக இந்த நினைவு மண்டபத்தின் கட்டுமான பணிகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மனு இந்திரா பானர்ஜி மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு வக்கீல் வாதாடுகையில், இந்த நினைவு மண்டபம்கடலோர மண்டலவழிமுறைகளை வகுப்பதற்கு முன்பே மெரீனாவில் கட்டப்பட்ட எம்.ஜி.ஆர் நினைவிடம் உள்ளவளாகத்திற்கு உள்ளாகவே கட்டப்படுகிறது. இதில் எவ்வித விதி மீறல்களும் இல்லை.மேலும் அமைக்கப்படவிருக்கும் நினைவு மண்டபத்தின் வரைபடத்தை நீதிமன்றத்தில்தாக்கல் செய்ய இருப்பதாகவும் வாதிட்டார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
முதலில் அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்தியாவில் மிகப்பெரிய கடற்கரையானா மெரீனாவை பாதுகாப்பது நமது கடமை. உண்மையில் அங்கு நினைவிடம் அமைக்க கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் இருதரப்பு வாதத்தையும் கேட்ட பிறகுதான் தீர்ப்பு வழங்கப்படும். நினைவகம் தொடர்பான வரைபடத்தை விரைவில்சமர்ப்பிக்க வேண்டும் எனக்கூறி அடுத்த திங்கள் கிழமைக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.