
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதியின்மக்களவை உறுப்பினருமானவசந்தகுமார் இன்றுமாலை காலமானார்.அவருக்கு வயது 70.
கடந்த 9 -ஆம் தேதி கரோனாஉறுதி செய்யப்பட்டு அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதனையடுத்து அவருக்குகரோனா சோதனை செய்ததில் நெகட்டிவ் என்ற வந்த போதிலும் அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் காய்ச்சல் இருந்ததால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை முதலே அவரதுஉடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் காலமானார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அவரது மறைவிற்கு உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.அதில், ''சித்தப்பா நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது. என் சிறுவயது முதல் திருமணம் வரை ஒன்றாக வளர்ந்தோம். அப்பா குமரி அனந்தன் அரசியல் தாக்கம் 2 பேரிடமும் இருந்தது. ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம். இயக்கம் வேறாக இருந்ததால்இணக்கமாகஇல்லையே தவிர, இரத்த பாசம் இருவரிடமும் உண்டு.தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும், துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன். சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது, சண்டையிட்டது எல்லாம் நினைவுக்கு வருகிறது. ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுதுகொண்டிருக்கிறேன்'' என தனது உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)