Advertisment

என் உயிர்க்கு ஆபத்து-நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி!!

சென்னை மாதவரத்தில் தான் தங்கியுள்ள வீட்டிலிருந்து வெளியே அனுப்ப தந்தையான விஜயகுமார் முயற்சித்து வருவதாகவும், சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாகவும். அதேபோல் தனக்கும் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

 Actress Vanitha Vijayakumar interviewed

சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர்விஜயகுமாரின் மகள்வனிதா விஜயகுமார் கூறும்போது.

நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் என்னை போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். நான் யாருக்கு என்ன தவறு செய்தேன். என்னுடைய சொந்த வீட்டில் என்னுடைய அம்மா வீட்டில் இருக்க கூட என்னால் முடியவில்லை. எனது தந்தையே என் மீது புகார் கொடுத்து என்னை ஊடகத்தின் மத்தியில் மானபங்கப்படுத்தி உள்ளார். என்னுடைய குழந்தைகள் கூட என்கூட இருக்கிறார்கள் அவர்களை பேத்தி என்று கூட பார்க்காமல் இப்படி ஒரு சித்திரவதை செய்கிறார்கள். நான் எப்பொழுது டாடி என்று படத்திற்குபெயர் வைத்தேன் என்றுதெரியவில்லை. இந்த அளவிற்கு ஒரு தந்தை பெற்ற மகளை டார்ச்சர் செய்வது மக்களெல்லாம் பார்க்கும்படி ஊடகத்தின் முன் தொந்தரவு செய்வது யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். எவ்வளவு முறை வீட்டிற்கு சென்றாலும் நாயை அடிப்பது போல் அடித்துத் துரத்துகிறார்கள்.நீதிமன்றத்தில்உத்தரவை வாங்கினாலும் இப்படித்தான் நடக்கிறது என்றார் கண்ணீர் மல்க.

arrest police vanitha vijayakumar
இதையும் படியுங்கள்
Subscribe