தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரபல நடிகையும், ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் அகரம்பேட்டையை சேர்ந்த சுமதி என்ற பெண் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இருசக்கர வானத்தின் மீது அதிவேகமாக வந்த லாரி ஒன்று மோதியதில் சுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சம்பவத்தை அறிந்த சுமதியின் உறவினர்கள் அங்கு கூடினர். சுமதியின் உடலை பார்த்து கதறி அழுந்தனர். அப்போது அந்த வழியே காரில் வந்த ரோஜா, காரை நிறுத்தி என்னவென்று விசாரித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லாரி உரிமையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக பேசியதாக சுமதியின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
இதனை கேட்ட ரோஜா, உடனடியாக சென்னை - திருப்பதி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த போலீசார் ரோஜாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த விபத்து சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் புகார் குறித்து விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததையடுத்து அந்த இடத்தில் இருந்து ரோஜா புறப்பட்டார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரோஜா, சாலைமறியல் போராட்டம் தொடர்பாக என் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நகரி போலீஸார் தெரிவித்துள்ளனர். சாலை மறியல் போராட்டம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடத்திருப்பதும் ஆளும் கட்சியின் திட்டமிட்ட சதி. சட்டமன்றத்திலும் எனக்கு இதே தான் நடந்தது. எந்த தவறும் செய்யாத என்னை ஒரு வருடம் சட்டமன்றத்துக்குள் நுழையவிடாமல் செய்தார்கள்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மந்திரியுமான லோகேஷ் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினரிடம் இருந்து எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன.
அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆனால் நான் எதற்கும் பயப்படமாட்டேன். சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக, சாதாரண மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்காகதொடர்ந்து போராடுவேன். என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளேன் என்று தெரிவித்தார்.