Skip to main content

கோழைக்கு மனைவியா இருக்க முடியாது... வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை

Published on 12/09/2018 | Edited on 15/09/2018
anandhi


''ஹலோ... கடைசியா என் சிரிப்பை பாத்துக்கோங்க... யாரெல்லாம் பாக்கனுமோ என்ன... உங்களுக்காகத்தான் சிரிக்கிறேன். நான் சிரித்தால் எப்பவும் உனக்கு பிடிக்கும்தானேக்கா, அம்மாவுக்கும்தான், அண்ணாவுக்கும்தான், நம்ம குடும்பத்துல மாமா குழந்தைகளுக்கும்தான் எல்லாருக்கும் நான் சிரிச்சா பிடிக்கும். 
 

ஆனா இந்த வீட்ல நான் சந்தோஷமா சிரிச்சு வாழுறதுல யாருக்கும் பிடிக்கல... அதனாலத்தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன். என் புருஷனே எனக்கு துணையா இல்லக்கா. அக்னிய சாட்சியா வைச்சுத்தா தாலிய கட்டினேன். ஆனா இங்க எதுவுமே இல்லக்கா...'' என்று ஒரு பெண் பேசும் வீடியோ வாட்ஸ் அப்புகளில் பரவியது. 
 

இதுகுறித்து விசாரித்தபோது, சென்னை அருகே திருமுல்லைவாயில் செந்தில் நகரை சேர்ந்தவர் தேவநாத் மனைவி ஆனந்தி என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுடன் தேவநாத் தந்தை சம்மந்தம், தாய் சிவகாமி ஆகியோரும் வசித்து வந்துள்ளனர்.
 

இந்த நிலையில்தான் கணவர் வீட்டு கொடுமை தாங்க முடியாமல்தான் தான் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலைக்கு முன் செல்போனில் தான் பேசும் வீடியோவையும் பதிவு செய்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. 
 

மாமியார் கொடூர குணம் கொண்டவர், மாமனார் பொண்டாட்டிக்கு பயப்படும் பயந்தாங்கொள்ளி, என் புருஷன் அம்மா அப்பாவுக்கு பயந்த கோழை. ஏழைக்கு மனைவியா இருக்கலாம். ஆனா இந்த கோழைக்கு மனைவியா வாழ்வதை விட சாவதே மேல். இவ்வாறு ஆனந்தி தனது கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 



 

சார்ந்த செய்திகள்

Next Story

மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய கணவருக்கு சிறை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 The court action decision for Husband jailed for sending video to wife

கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 36 வயது மிக்க இளைஞர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சிறிது நாளிலேயே, கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் அந்த பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால், கணவர் விவாகரத்து தரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் மனமுடைந்த அந்த பெண் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையே, அந்த பெண் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அவரது கணவர் மின்னஞ்சல் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி, ஆபாசமான குறுந்தகவல்களையும் அனுப்பி வந்துள்ளார். இதில் கோபமடைந்த அந்த பெண், இந்த விவகாரம் குறித்து பெங்களூரில் வசித்து வரும் தனது சகோதரரிடம் கூறியுள்ளார். அதன் பேரில், அந்த பெண்ணின் சகோதரர் பெங்களூர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து பெங்களூர் வந்த பெண், கணவர் அனுப்பிய ஆபாச வீடியோக்கள் தொடர்பானது குறித்து தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பான வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று (19-03-24) நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது. அதில், விவாகரத்து கேட்டு பிரிந்து வாழும் மனைவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்தியது உறுதியானதால், தனியார் நிறுவன ஊழியருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.